வெண்­குஷ்டம் சருமத்தின் இயற்­கை­யான நிறம் மாறி உடம்பில் ஒவ்­வொரு இடத்



>>  Contact  <<

முழு­வ­து­மாக சருமத்தால் மூடப்­பட்ட உரு­வம்தான் மனித உடல். ஒரு மனி­தனைப் பார்க்கும் போது, கண்­ணுக்கு முதலில் தெரி­வது அந்த நபரின் சருமம் தான். அந்த வகையில்,ஒரு மனி­தனைப் பொறுத்­த­வரை சருமம் ஒரு முக்­கி­ய­மான உறுப்பு என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகு­தியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாக­ரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்­கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பல­வற்றைப் பொறுத்து அவ­னுக்கு சரும நோய்கள் வரக்­கூடும். அதேபோல், மனி­த­னுக்கு மனிதன் வரக்­கூ­டிய நோய்­களும் வித்­தி­யா­சப்­படும்.

அதில் வெண்­குஷ்டம்  என்ற நோய் பலரை வதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
இவர்கள் தமது நோய்க்கு நிவா­ரணம் தேடும் முயற்­சி­யாக ஆங்­கில மருத்­துவ முறையில்  கைவி­டப்­பட்ட வெண்­குஷ்ட நோயை ஆயுர்­வேத பாரம்­ப­ரிய மருத்­துவ முறை­களால்  குணப்­ப­டுத்­தலாம்  என்­கிறார் ஆயுர்­வேத வைத்­திய நிபுணர் டாக்டர் கலாவெவ என்.நபீஸ்தீன்.

வெண்­குஷ்டம்  பற்றி சிறு விளக்கம்  தாருங்கள்?

சருமத்தின் இயற்­கை­யான நிறம் மாறி இ உடம்பில் ஒவ்­வொரு இடத்­திலும் சிறுசிறு அளவில் வெண்­மை­யான அடை­யா­ளங்கள் அல்­லது படை தோன்றி அவை படிப்­ப­டி­யாக உடல் முழு­வதும் பரவிச் செல்லும் நிலை­மையை வெண் குஷ்டம் என்­கின்றோம்.

வெண்­குஷ்டத்தை  அடை­யாளம் காணலாம்?

ஒவ்­வொரு நாட்­டி­னதும் தட்ப வெப்ப நிலை­க­ளுக்­கேற்­பவே சருமத்தின் நிறம் மாறு­த­ல­டை­கின்­றது. நம்மில் சிலர் சிவப்­பா­கவும்இ சிலர் கறுப்­பா­கவும் இருப்­ப­தற்குக் காரணம் நமது சருமத்தினுள் மெல­னோசைட் எனப்­படும் கலங்கள் தான். இக்­க­லங்கள் மெலனின் எனப்­படும் நிற­மியை உற்­பத்தி செய்­கின்­றன. இந்­நி­ற­மியே சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்­கின்­றன. மெலனின் எனப்­படும் வர்ண மை தோலில் உற்­பத்­தி­யா­வது குறை­வ­டையும் போது வெண்குஷ்டம் எனப்­படும் தோல் நோய் ஏற்­ப­டு­கின்­றது. சிவப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு மெலனின் குறை­வா­கவும்இ கறுப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு மெலனின் அதி­க­மா­கவும் சுரக்கும் என்­பதும்இ இது பரம்­ப­ரை­யாக தொடர்­கி­றது என்­பதும் மருத்­து­வத்தின் கருத்­துக்­க­ளாகும்.

இன்று உள­வியல் ரீதி­யாக பலரை வாட்டி வதைக்கும்இ தோலின்
அழகைப் பாதித்து வரும் வெண்குஷ்­டத்தை ஆங்­கி­லத்தில்  VITILIGO என அழைப்பர். சித்த மருத்­து­வத்­து­றையில் வெண்­மேகம்இ வெண்குஷ்டம் என்றும் சிங்­க­ளத்தில் 'சுது­க­பர' என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. உண்­மையில் வெண் குஷ்டம் அசுத்­த­மா­னதோ, தொற்­று ­நோயோ அல்ல என்­பதை யாவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வெண் குஷ்­டத்தைப் பூரண­மாகச் சுக­மாக்­கு­வதில் நவீன மருத்­து­வத்­துறை பின்­ன­டைந்­தி­ருந்­தாலும் பாரம்­ப­ரிய ஆயுர்­வேத மருத்­து­வத்­துறை இதற்கு நிவா­ர­ண­ம­ளிக்­கின்­றது. வெண்­குஷ்டம் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை அனுபவ ரீதி­யாக ஒழுங்­காகக் கண்­ட­றிந்து பூரண­மான சிகிச்சை மூலம் அதைக் குணப்­ப­டுத்த முடியும்.
வெண்குஷ்­ட­த்திற்கான விசேடஅறி­கு­றிகள் உண்டா?

வெண்குஷ்­ட­மா­னது முதலில் உத­டுகள், புருவம், விரல்கள்,தலை, கை, கால், முகம் மற்றும் உடலின் அனைத்துப் பாகங்­க­ளிலும் பர­வி­விடும். இந்நோய் மூலம் உட­லுக்கு எது­வித வலியோ, வேத­னையோ இல்லாவிட்டாலும் இது ஒரு குறை­யா­கவே தோன்­று­வது தவிர்க்க முடி­யாது. இந் நோய் மூலம் அழகும், பொலிவும் கெட்டு விடு­வதே இதற்கு மூலக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

வெண்குஷ்­ட­மா­னது கலங்­களில் மெலனின் எனப்­படும் நிற­மிகள் குறை­வடை வதற்கும், அதி­கமா வதற்கும் குறிப்­பிட்ட காரணம் ஏதும் இல்லை என்றும், இயற்­கையே காரண­மென்றும் சில மருத்­துவ முறை­களில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற போதிலும்இ  பாரம்­ப­ரிய ஆயுர்­வேத மருத்துவ முறையில் அனு­பவ ரீதி­யாக முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

பூனைஇ எலி மற்றும் பாம்பு போன்ற உயி­ரி­னங்கள் கடித்­தாலோ அல்­லது அவை  உண்ட   உண­வு­களை உண்­டாலோ வெண் குஷ்டம் ஏற்­பட கார­ண­மாக அமை­கி­றது. ஆனால், இதனை நவீன மருத்­துவம் ஏற்றுக் கொள்­வ­தில்லை. இருந்த போதிலும் இ வெண்குஷ்டம் ஏற்­பட்ட பலர் தமக்கு பூனை அல்­லது எலி கடித்த பின் தான் வெண்குஷ்டம் ஏற்­பட்­ட­தாகத் தெரி­விக்­கின்­றனர்.

வாதம்இ பித்தம்இ கபம் என்­கின்ற முத்­தோ­ஷங்­களின் மூலமும் இந்த வெண் குஷ்டம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. அதா­வதுஇ வாதத்­தினால் தோன்றும் வெண்­குஷ்­டத்தை தொடு­கையின் மூலம் கண்­ட­றிய முடியும்.

இது சில சந்­தர்ப்­பங்­களில் நிற மாற்­றமும் அடையும். சில சந்­தர்ப்­பங்­களில் மருந்­துகள் பாவிக்கும் போது வலி கூடக் காணப்­படும். பித்­தத்­தினால் தோன்றும் வெண்குஷ்டம் மிக மென்­மை­யா­ன­தாக தாமரைப் பூவின் வெளிப்­பக்க நிறம் போல காணப்­படும். சில பித்த வெண்குஷ்ட அடை­யாளம் வெயிலில் போகும் போது     சாதா­ரண எரி­வுடன் செம்­பொறி போன்று காணப்­ப­டு­வதும் தவிர்க்க முடி­யா­தது. சளி­யினால் அல்­லது கபத்­தினால் தோன்றும் வெண்குஷ்டம் வெண்­மை­யாகக் காணப்­படும். சில நேரம் அந்த அடை­யாளம் இல்­லா­தது போல் தோன்றும். பொது­வாகச் சிறிது நமைச்சல் தன்­மை­யுள்­ள­தா­கவே இருக்கும்.

வெண்குஷ்டம் நோய்க்­கான படி­மு­றைகள் அல்­லது நிலைகள் பற்றி விளக்கம் தாருங்கள்?

முதலாம் நிலை: முதலில் சிறிது சிறி­தாக ஒரு சில இடங்­களில் மட்டும் புள்ளி போன்று ஆரம்­பிக்கும் நிலையில் உட­னடி சிகிச்சை வழங்­கினால் ஓரிரு வாரங்­களில் சுக­மா­கி­விடும்.

இரண்டாம் நிலை: ஆரம்பநிலை கவ­ன­யீ­ன­மாக இருந்தால் பல இடங்­களில் பரவும், இதற்கு ஓரிரு மாதங்கள் சிகிச்சை வழங்க வேண்டும்.

மூன்றாம் நிலை: இரண்டாம் நிலையில் ஒழுங்­கான சிகிச்சை அளிக்­கப்­ப­டாமல் கால­தா­ம­த­மா­னாலும் பல­வகை மருந்­துகள் உப­யோ­கிக்­கப்­பட்­ட­தனாலும் முற்­றிய நிலை. இந்­நி­லையில் இள­வ­ய­தி­னரின் 90 வீத­மா­ன­வரை பூரண குண­மாக்­கலாம். வய­தா­ன­வர்கள் மற்றும்    பல­வீ­ன­மா­ன­வர்­க­ளுக்கும் முக்­கி­ய­மான மென் பகு­தி­க­ளான முகம் உட்­பட பல பகு­தி­களைக் குண­ம­டையச் செய்­வ­தோடு, வேறு இடங்­களில் பரவாமல் தடுக்­கலாம். 

பொது­வாக நோய்க்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு வலிஇ அரிப்புஇ எரிச்சல் இருக்­காது. இதனால் நோயா­ளிக்கு ஓய்வு தேவை­யில்லை. அன்­றாட அலு­வல்கள்இ கட­மைகள் செவ்­வனே செய்­யலாம். எப்­ப­டி­யான வெண்­ குஷ்டம் ஆயினும் சரிஇ உரிய கார­ணத்தைக் கண்­டறிந்த கால­ தா­ம­த­மின்றி சிகிச்சை   செய்தால் சில மாதங்­களில் சுக­ம­டையச் செய்­யலாம். அண்மைக் காலங்­களில் நோயைப் பூரண­மாகச் சுக­மாக்கும் முயற்­சியில் ஆயுர்­வேத மருத்­துவ முறை நல்ல பலனை வழங்­கி­யுள்­ளது.

இந்த நோய்  ஆண் பெண் இருபாலாருக்கும் எந்த வகையில் பாதிக்கின்றது?

வெண்குஷ்­ட­மா­னது மன அழுத்தம் கார­ண­மாக ஏற்­பட வாய்ப்­புள்­ளது. நீண்ட நாட்­க­ளாக இருந்து வரும் நோய்கள்இ சரு­மங்களில் ஏற்­படும் ஊறுகள்இ பரம்­பரைக் கார­ணிகள்இ எதிர்­பா­ராத வித­மாக ஏற்­படும் அதிர்ச்­சிகள்இ தீராத அடிக்­கடி உண்­டாகும் கஷ்­டங்கள் போன்ற காரணங்­களும் மெலனின் குறை­வடையக் கார­ண­மா­கலாம். நோயுள்ள ஆண்களையும்இ பெண்­க­ளையும் ஆராய்ச்­சிக்கு உட்­ப­டுத்­தியபோது நோய் சம்­பந்­த­மாக விரக்­தி­ய­டைந்­த­வர்­க­ளுக்கே நோய் வேகமாய்ப் பரவும் வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்­தது.

வெண்குஷ்டம் பரம்­பரை நோயா?


இந் நோய்க்குப் பரம்­பரை முக்­கிய கார­ணி­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. தாய் வழி­யிலோஇ தந்தை வழி­யிலோ பரம்­பரை­யாக இந்நோய் ஏற்­ப­டலாம். அதி­க­மாக மூன்­றா­வது பரம்­ப­ரையைக் கூட வெண்குஷ்டம் தாக்­கு­கி­றது என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உடம்பில் நச்சுத்தன்மை தங்­கி­யி­ருத்தல், மருந்­து­களும் உணவுப் பொருட்­களும் ஒவ்­வா­மையின் காரண­மாக நச்சுத் தன்­மை­ய­டைந்­தி­ருந்தால் வெண்குஷ்டம் ஏற்­ப­டு­கின்­றது. 

இந்நோய்க்கு சூழலின் தாக்கம் உள்ளதா?

வெயில் அல்­லது சூரிய வெப்­பத்­தினால் சூடாகும் நீரில் குளிப்­ப­தினால் வெண் புள்­ளிகள் உண்­டா­கலாம் என்று அரபு நாட்டு வைத்­திய முறைகள் தெரி­விக்­கின்­றன. சூரியக் கதிரால் ஒவ்­வாமை      (Sun Alegy)  ஏற்­ப­டு­வ­துண்டு. உடலின் மீது சூரிய ஒளிக்­க­திர்கள் படும் போது அரிப்புஇ எரிச்சல், தடிப்பு ஏற்­ப­டு­வ­துண்டு. நாள­டைவில் அது வெண் புள்ளி­க­ளாக மாறலாம். அதேபோல் சூரிய ஒளிக்­க­திர்கள் நீரில் சென்ற­டையும் போது மருத்­துவக் குணங்கள் பாதிக்­கப்­பட்டு ஒவ்­வாமை ஏற்­ப­டலாம் என அம் மருத்­துவம் கூறி­யுள்­ளது. 

   
உணவுப் பாவனையின் தாக்கம் இந்நோய் ஏற்படக் காரணமாக அமையுமா?

செம்புப் பாத்­தி­ரத்தில் நீண்ட நேரம் வைக்­கப்­பட்ட உணவு வகை­களை உண்டாலும் வெண்குஷ்டம் ஏற்­ப­டு­கின்றது என்­பது கிரா­மத்­த­வர்­களின் கருத்து. உண்ட உணவு ஜீர­ணிக்­காது விட்டாலும் உடல் முழு­வதும் அசுத்­த­மாகிவிடு­கி­றது. 

இந்த அசுத்தம்  சளி மூலம் இரத்­தத்தில் கலப்பதன் மூலம் வெண்குஷ்டம் ஏற்­ப­டு­கி­றது.அசுத்­த­மான இரத்தம். குளிர்ச்­சி­யான இரத்தம் ஆகி­ய­வையும் வெண்குஷ்டம் ஏற்­படக் கார­ண­மாக அமைந்­துள்­ளன.

இவ்­வா­றான கார­ணங்­க­ளினால் ஏற்­படு­கின்ற வெண்குஷ்­ட­மா­னது பிர­தான இரண்டு வகை­களாகக்       காணப்­ப­டு­கின்­றது. சருமத்தில் சிறு பகுதி மட்டும் பாதிப்­பது ஒன்றுஇ மற்­றை­யது உடல் முழு­வதும் பாதிப்­பது.

சில­ருக்கு இந் நோய் ஏற்­பட்டால் சருமத்தில் காணப்­படும் முடிகள் வெள்­ளை­யா­கவும், சில­ருக்குக் கறுப்­பா­கவும் காணப்­படும். சில­ரு­டைய சருமம் சிவப்பு கலந்த வெள்­ளை­யா­கவும் அல்­லது இரத்தம் சார்ந்த நிற­மா­கவும் காணப்­படும். சில­ரு­டை­ய சருமம் தூய வெண்­மை­யா­கவும் தோற்­ற­ம­ளிக்கும். ஒவ்­வொரு வகை வெண்­குஷ்­டத்­திற்கும் வெவ்­வே­றான சிகிச்சை முறைகள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

வெண்குஷ்டம் நோயானது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது வைத்தியர் என்ற வகையில் நீங்கள் என்ன கூற விரும்பு கின்றீர்கள்?

ஆரோக்­கி­ய­மான மனி­தர்­களின் உடலில் கூட இலே­சான வெண் புள்­ளிகள் ஏற்­படு­வ­துண்டு. அவை பற்றி உட­னுக்­குடன் கவ­னிக்­காது விட்டால் நாள­டைவில் உதடுகள்,புருவம், விரல்கள், தலை, கை, கால், முகம் மற்றும் உடலின் அனைத்துப் பாகங்களிலும் இது பரவிவிடும். இந்நோய் மூலம் உடலுக்கு எதுவித வலியோ,வேதனையோ இல்லாவிட்டாலும் இது ஒரு குறையாகவே தோன்றுவது தவிர்க்க முடியாது. இந் நோய் மூலம் அழகும், பொலிவும் பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம்.

வெண்குஷ்ட நோயினால் சிலர் தற் கொலை எண்ணம் கொண்டவர்களாகவும் தம்மை ஆக்கிக் கொள்கின்றனர். இவ் வாறானவர்களின் நோயின் தன்மை கவலையின் காரணமாக நோய் பரவும் நிலை அதிகரிக்குமே ஒழிய நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆகவேஇ வீண் கற்பனைகளைத் தவிர்த்து சந்தோஷமாக இருப்பதன் மூலம் இந் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

வெண்குஷ்டம் ஒரு தொற்றுநோய், திருமணத்தின் பின் நோயின் பரவும் தன்மை அதிகரிக்கும் என்கின்ற தவறான எண்ணங்களினால் பலரின் குடும்ப வாழ்க்கை கூட பாதிப்படைகின்றது. இந்த மூட நம்பிக்கையை தவிர்த்து  நல்ல சிகிச்சை பெற்று நலமாகலாம்.

தொடர்புகளுக்கு:
வைத்திய கலாவெவ என்.நபீஸ்தீன்,
தொ.பே. :0777801491,
இல.82 ,நேற்றிவ் ஆயுர்வேதிக் ஹோம்,
கலாவெவ,விஜிதபுர, அநுராதபுரம். 
- See more at:  www.vitiligolanka.com

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.