Filled Under:

படையெடுக்கும் பாம்பும்.. பாம்பை பற்றிய தகவலும்..




படையெடுக்கும் பாம்பும்..
பாம்பை பற்றிய தகவலும்..
உபயோகமான பதிவு
உபயோகமிருந்தால் ஷேர் செய்யுங்கள்..
ஆபத்து எங்கேயும் எப்போதும் எப்படியும் வரலாம் நாம் கவனமாக செயல்பட வேண்டும்.
சில நாட்கள் முன் எனது வீட்டின் பின்புறம் உள்ள பைப்பில் கை கழுவதற்காக திறக்க சென்ற போது எதேச்சையாக ஏதோ நெளிவது போல் கண்ணில் பட்டது என்னவென்று உற்று பார்த்தால் "பாம்பு" பைப்பினுல் சுற்றி மறைந்து கொண்டு இருக்கிறது. நான் பார்க்காவிட்டால் நிச்சயம் என்னை கடித்திருக்கும் சுதாரித்து கொண்ட நான் அந்த பாம்பை குச்சியால் தட்டி வெளியே எடுத்து

விட்டுவிட்டேன்.
அதே போல் மற்றொரு நாளில் பல நாட்கள் ஒதுக்கி வைத்த பொருட்களை அகற்றலாம் என்று செருப்புகளை எடுத்த போது அதன் அடியில் பாம்பு குட்டி ஒன்று மறைந்துள்ளது.அதன் பிறகு ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்த விறகு குவியல் அதை மாற்றிய போது அங்கேயும் பாம்பு இருந்தது. இப்படி அடிக்கடி பாம்புகள் நாங்கள் இருக்கும் பகுதியில் வருகிறது. பலதை அடித்துவிடுகிறோம் சிலதை பிடித்து வேறு பகுதியில் விடுகிறோம்.
பாம்புகள் நம் வீட்டில் வாரமல் இருக்க என்ன செய்யலாம்.
* தென்னை,வாழை மற்றும் விவசாய நிலங்களும்,வயல்களும் பிளாட்டாக மாறி வருவதால் பாம்புகளின் இருப்பிடம் காலியாகிறது எனவே இது குடியிருப்பு பகுதியில் தஞ்சம் அடைவதற்கு வருகிறது என்றே சொல்லலாம்.
* நமது வீட்டையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
* வீட்டை சுற்றி காம்பவுன்ட் சுவர் கட்டி சிமென்டால் பூசி விடுங்கள்.அதே போல் ஜன்னல்களில் வலை அடித்து விடுங்கள் இதனால் கொசு,பூச்சு தொல்லைகளும் குறையும்.
* குப்பைகள் சேராமல் பார்த்து கொள்ளுங்கள். கற்கள்,டயர்கள்,மர பலகைகள்,சிரட்டைகள்,செருப்புகள்,கம்பு மற்றும் குச்சிகள்,குறிப்பாக ஆக்கர் பொருட்கள் இவைகளை குவித்து வைக்காதீர்கள்.
* குழந்தைகள் பள்ளியில் வந்தவுடன் ஷூக்களை வீட்டின் வெளியில் போடாமல் வீட்டின் உள்ளே ஒரு ஒரத்தில் வைக்க அனுமதியுங்கள் ஏனெனில் பாம்பு மற்றும் விஷ சந்துக்கள் ஷூவின் உள்ளே இரவில் மறைந்திருக்கலாம்.
*வீட்டை சுற்றி ஏதாவது வளையோ அல்லது குழி இருந்தால் சிமென்டால் அடைத்து விடுங்கள்.
* சந்தேகமான இடங்களில் குழந்தைகளை எந்நேரத்திலும் விளையாட அனுமதிக்காதீர்.
* பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.ஆகவே இரவு நேரங்களில் சந்தேகம் உள்ள இடங்களில் மெதுவாக நடக்காமல் வேகமாகவும் பலமாகாவும் நடந்து போங்கள்.


மேலும்
உலகளவில் பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு.நூற்றில் ஒரு சதவிகிதத்திற்கு குறைவானவையே நச்சுப்பாம்புகள்.
இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை.
ஆனால் நமக்கு தெரிந்த வகைகள் ஐந்து
1- படமெடுத்தால் நல்ல பாம்பு
2- படமெக்காத அனைத்தும் சாரை பாம்பு
3- உருவத்தில் பெரியதாகவும் தடியா வட்டமாக டிசைன் இருந்தா அது மலைப்பாம்பு
4- ஒல்லியா பச்சை கலரில் இருந்தா அது பச்சைபாம்பு அல்லது கண்கொத்தி பாம்பு
5- ஆற்றிலோ குளத்திலோ வாய்காலிலோ இருந்தா அது தண்ணிபாம்பு.
பாம்புகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது.
பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.
பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்.டிஸ்கவரி சானல் வந்ததால் பாம்பை பற்றிய பயம் சிறிது குறைந்துள்ளது எனலாம்.
ஒருவேளை பாம்பு நம்மை கடித்தால் என்ன செய்யலாம்.
* கடித்த பாம்பு எந்த வகை என்று அறிந்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அதன் விஷ தன்மையை அறிந்து மருத்துவரால் முறையான சிகிச்சை அளிக்கமுடியும்.
* பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும்.
* விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும்.
* பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும்.
* பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும்.
* பாம்பு கடிபட்டவரை படுக்க வைத்து கொண்டு செல்வதை விட உட்கார்ந்த நிலையில் கொண்டு செல்வதே சிறந்தது.
* பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதீர்கள் ஏனெனில் பெரும்பாலான தனியார் மருத்துவமனையில் பாம்பு கடி விஷமுறிவு மருந்துகள் நிலுவையில் இருக்காது. அதனால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் இதனால் நேரம் மிச்சமாகும்.
பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:
* நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
* நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.
* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.
* நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.
* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.
* பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.
* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.
* பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.
* பாம்பை அடித்தால் அதன் தலையை நன்றாக நசுக்க வேண்டும் ஏனெனில் காற்றை குடித்து உயிர் பிழைத்து நம்மை கொல்லும்.
இவ்வாறு கூறப்படும் அனைத்தையும் அறிவியல் ஆய்வுகள் மறுக்கின்றன.இவைகள் கட்டுக் கதைகள்.
மற்றவரகள் அறிய
உபயோகமான தகவலாக
இருந்தால் Share பன்னுங்கள்
இப்படிக்கு
தக்கலை ஆட்டோ கபீர்.

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.