Filled Under:

நாசாவின் புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் நடமாடும் துருவக் கரடி தென்படுகின்றதா?

நாசாவின் புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் நடமாடும் துருவக் கரடி தென்படுகின்றதா?




செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்களை நாசாவைவிட அதிகமாக ஆய்வு செய்யும் யு.எஃப்.ஓ. சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் சமீபத்திய புகைப்படம் ஒன்றில் ரோமத்துடன் உள்ள துருவக் கரடி தென்படுவதாக தெரிவித்துள்ளது.

ரோமத்துடன் உள்ள துருவக் கரடி நிழலின் மூலமாக தெளிவாக தெரிவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் இணையதளத்தில் ஏற்கனவே வெளியான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களில், நண்டுகள், பெண் உருவம், புத்தர் சிலை போன்றவை தென்படுவதாக இதில் செய்தி வெளியானது, குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக ஆணித்தரமாக நம்பும் ஸ்காட் சி வாரிங், இந்த இணையதளத்தில் ‘நாசா திட்டமிட்டு நமக்கெல்லாம் செவ்வாய் கிரகம் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியக்கூடாது என்பதற்காகவே, கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை வெளியிடுவதாக’ குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தனது இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய தகவல்களை, உலகோடு பகிர்வது மட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன்னுக்கும் இதன் விவரங்களை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.