Filled Under:

earthquake இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது பாகிஸ்தானில் 8.1 ரிக்டர்


 புதுடில்லி : இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் பெரும் அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கன் எல்லை பகுதியான இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் மதியம் 2.42 மணியளவில் உணரப்பட்டது . இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் 8.1 ரிக்டர் அளவாகவும், காஷ்மீரில் 7. 7 ரிக்டர் அளவாகவும் பதிவாகியது. பூமிக்கடியில் 190 கி. மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவாகியதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது . 

இதன் காரணமாக காஷ்மீர், பாகிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி சேவை , மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது .

இந்த நிலநடுக்க பாதிப்பு டில்லியில் நில அதிர்வாக உணரப்பட்டது. வட மாநிலங்களான ராஜஸ்தான் , பஞ்சாப் , இமாச்சல் பிரதேசம், உத்தர்கண்ட் மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது 2 நிமிடம் இந்த அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். டில்லியில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது . இந்த நிலநடுக்கத்தால் வட மாநில மக்கள் பீதியில் உறைந்தனர். 

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர் . 







Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.